Latest News :

இந்திய ரசிகர்களிடம் வைரலாகும் ‘தோர் : லவ் அண்ட் தண்டர்’
Tuesday April-19 2022

ரும் காத்திருப்பிற்கு பின் ஆன்லைனில் வெளியான தோர்: லவ் அண்ட் தண்டர் டீசர் வெளியான சில மணிநேரங்களில் வைரலாக மாறியது!  டீசரில் தோர் ஒரு சாதுவைப் போல மலையில் தியானம் செய்யும் காட்சியைப் பார்த்து,  இந்திய ரசிகர்கள் சமூக ஊடகங்களில் படம் எவ்வாறு இந்தியாவுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்துள்ளது என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர்! .

 

மார்வல் ஸ்டுடியோஸ் திங்களன்று தோர்: லவ் அண்ட் தண்டர் படத்தின் முதல் டீசரை அறிமுகப்படுத்தியது, இது அவெஞ்சர்ஸ்: எண்ட்கேமின் நிகழ்வுகளுக்குப் பிறகு,  உள் அமைதியைக் கண்டறிவதற்கான தோரின் பயணத்தை வெளிப்படுத்துகிறது. முதல் சில தொடக்கக் காட்சிகளில், தோர்  தனக்கு பிரியமான நட்சத்திர பெருவெளியில் தியானத்தில் இருப்பதைப் பார்க்கலாம், இதனை கண்ட இந்திய ரசிகர்கள் நமது சொந்த சிவபெருமானைப் போன்ற தோற்றத்துடனும் அதிர்வுகளுடனும்,  டீசர் இந்தியாவை எப்படி ஈர்க்கிறது என்று ரசிகர்கள் உற்சாகமாக பேசி வருகின்றனர்.

 

இணையத்தில் மலை உச்சியில் தியானம் செய்யும் காட்சியின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துகொண்டு, “#ThorLoveAndThunder இல் தோர் ஒரு சாதுவைப் போல் தியானம் செய்வது போல் தெரிகிறது”  என்பது போன்ற பல்வேறு ட்வீட்கள் வந்துள்ளன. மற்றொரு ரசிகர், "மோஹ் மாயாவிலிருந்து விலகி சாது வாழ்க்கையின் பாதையில் செல்ல தோர் இமயமலைக்குச் சென்று தனது சூப்பர் ஹீரோ வாழ்க்கையை விட்டுவிட்டு சன்யாசியானார்" என்று கருத்து தெரிவித்துள்ளார். மூன்றாவது நபர், "டிரெய்லரில் காட்டப்பட்டுள்ள தோர் தியானம், போதிசத்வா ஞானம் பெற தியானம் செய்வதை சித்தரிக்கும் கலையை நினைவூட்டுகிறது..." என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 

பிரபலமான ’தோர்: ரக்னா ரோக்’ படத்தினை  இயக்கி, லவ் அண்ட் தண்டர் படத்திற்காக மீண்டும்  இயக்குநரின் நாற்காலிக்குத் திரும்பியிருக்கும் இயக்குநர்  டைகா வெயிட்டிடியின் அசல் அம்சங்கள்  ஆக்‌ஷன் பேக் செய்யப்பட்ட ஸ்டைலான மற்றும் வேடிக்கையான டிரெய்லரில் பிரதிபலிக்கின்றன. மார்வல் படங்களில் இந்தப் படம் இந்தியாவில் புதிய அளவுகோல்களை அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

 

மார்வெல் ஸ்டுடியோஸ் 'தோர்: லவ் அண்ட் தண்டர்' ஜூலை 8 ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.

Related News

8176

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

’நிறம் மாறும் உலகில்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
Tuesday January-21 2025

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...

’மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும் - இயக்குநர் பி.வாசு உறுதி
Tuesday January-21 2025

யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...

Recent Gallery