ஒரே படத்தில் நான்கு கதைகள், என்ற வித்தியாசமான திரைக்கதையோடு உருவாகியுள்ள ‘சோலோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
இப்படத்தின் நான்கு கதைகளிலும் நாயகனாக துல்கர் சல்மான் நடித்திருக்க அவருக்கு ஜோடியாக ஆர்த்தி வெங்கடேஷ், ஸ்ருதி ஹரிஹரன், நேஹா ஷர்மா, சாய் தன்ஷிகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஜான் விஜய், சதீஷ், அனுபமா, அழகம்பெருமாள், அன்சன் பால், அன் ஆகஸ்டின், மனோஜ் கே.ஜெயன், கோவிந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் ஹீரோ ஒருவர் தான் என்றாலும், இப்படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதைக்கும் நான்கு வெவ்வேறு ஒளிப்பதிவாளர், வெவ்வேறு இசையமைப்பாளர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். 10 க்கும் மேற்பட்ட பாடல்களை கொண்ட படமாக உருவாகியுள்ள ‘சோலோ’ படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இத்துடன், சமீபத்தில் இப்படத்தில் உள்ள சிறு காட்சி ஒன்றும் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. அந்த காட்சியே படம் எந்த அளவுக்கு மேக்கிங்கில் சிறப்பாக வந்திருக்கும் என்பதை உணர்த்தியது.
பாலிவுட்டில் வெற்றி இயக்குநராக திகழும் பிஜாய் நம்பியார் ஏற்கனவே விக்ரம், ஜீவா நடித்த டேவிட் படத்தை இயக்கியுள்ள நிலையில், ‘சோலோ’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.
தொடர்ந்து நேரடி தமிழ்ப் படங்களில் கவனம் செலுத்தி வரும் துல்கர் சல்மானின், மற்றொரு நேரடி தமிழ்ப் படமான ‘சோலா’ வரும் அக்டோபர் 5 ஆம் தேதி உலகம் மூழுவதும் வெளியாகிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...