அவனி டெலி மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரிக்க, சுந்தர்.சி நாயகனாகவும், ஜெய் வில்லனாகவும் நடிக்கும் படம் ‘பட்டாம்பூச்சி’. 1980 களில் நடக்கும் கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஜெய் கொடூரமான சைக்கோ கொலைகாரனாக நடிக்க, அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க துடிக்கும் காவல்துறை அதிகாரியாக சுந்தர்.சி நடிக்கிறார். இவர்களுடன் ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பத்ரி எழுதி இயக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய, நவநீத் சுந்தர் இசையமைக்கிறார். பென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்ய, ராஜசேகர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். நரு.நாராயணன், மகா கீர்த்தி திரைக்கதை எழுதியுள்ளனர்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ,ஜெய், சுந்தர்சி இருவரின் கதாபாத்திரத்தை விளக்கும் போஸ்டர் .இவை அனைத்துமே மிகவும் வித்தியாசமாக இருப்பதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. போஸ்டரைப் பார்த்தால் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் விதமாக உள்ளதாக அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தப்படத்தில் ஜெயில் காட்சியில் வரும் ஒரு கானா பாடலை ஜெய் இசையமைக்க இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். “ஏக்கு மாறு தோ துக்கடா வாங்கடா ஜெயிள்ள தவ்லத்தா வாழ்ந்து வரும் நாங்கடா...” எனத் தொடங்கும் இந்தப் பாட்டுக்கு ஜெயில் குத்து என்று பெயரிட்டுள்ளனர்.
மே மாதம் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு இப்போதிலிருந்தே துவங்கிவிட்ட நிலையில், விரைவில் டீசர் மற்றும் பாடல் வீடியோ வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...