அமேச்சான் பிரைம் வீடியோவில் சமீபத்தில் வெளியான ‘ஓ மை டாக்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்லது. குடும்ப பொழுதுபோக்கு மற்றும் சிறுவர்களுக்கான படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சிம்பா என்ற நாய் குட்டிக்கும், அர்ஜுன் என்ற சிறுவனுக்கும் இடையே இருக்கும் உணர்வூப்பூர்வமான பாசத்தை மிக அழகாக சொல்லியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜயகுமார், அவருடைய மகன் அருண் விஜய் மற்றும் அருண் விஜயின் மகன் ஆர்ணவ் விஜய் என்று மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் ரசிகர்களிடம் மட்டும் இன்றி ஊடகம் மற்றும் திரையுலகினரிடமும் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த ஊடகங்கள் விமர்சன ரீதியாக படத்தை கொண்டாட, திரையுலக பிரபலங்கள் பலர் படம் பற்றிய தங்களது கருத்துக்களை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ் ‘ஓ மை டாக்’ படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஒரு செல்லப்பிராணி காதலனாக, இந்த படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.
அவருடைய பதிவுக்கு படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவில், “மிக்க நன்றி!! நான் ஜான்டி ரோட்ஸ் உடைய பெரிய ரசிகர்! உங்கள் மகள் இந்தியா ரோட்ஸுக்கும் இப்படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்!!” என்ற தெரிவித்தார்.
நடிகர் மகேந்திரன் வெளியிட்ட பதிவில், “#OhMyDog இந்த திரைப்படத்தில் ஆர்ணவ்விஜய் நடிப்பை பார்த்து என் இதயம் பூரித்தது. படத்தில் மூன்று தலைமுறையை சேர்ந்தவர்களை ஒன்றாக பார்க்க மிகவும் அருமையாக இருந்தது. அருண் விஜய் அண்ணா நிஜத்திலும், திரையிலும் சிறந்த தந்தையாக இருந்து வருகிறார். லவ் யூ அண்ணா. இந்த இதயப்பூர்வமான திரைப்படத்தை @PrimeVideoIN இல் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டுள்ள பதிவில், “#OhMyDog குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு சரியான கோடை விருந்தாக இருக்கும்!! அதை தவற விடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் பிரசாந்த் சோலங்கி, ”இந்த பாதங்களுக்கு குணப்படுத்தும் சக்தி உள்ளது 'ஓ மை டாக்' பார்க்க ஆவலாக உள்ளேன்!” என்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் பிரைம் வீடியோ மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் இடையேயான 4 பட ஒப்பந்தத்தில் உருவாகியுள்ளது. இப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகி வருகிறது. பார்வையாளர்களுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் கிடைக்கிறது.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...