Latest News :

மிரட்டும் ‘பட்டாம்பூச்சி’ டீசர்!
Tuesday April-26 2022

சுந்தர்.சி ஹீரோவாக நடிக்க, ஜெய் முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கும் ‘பட்டாம்பூச்சி’ படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சைக்கோ த்ரில்லர் ஜானர் படமான இப்படத்தின் டீசரில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் செம மிரட்டலாக இருப்பதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

அவனி டெலி மீடியா சார்பாக குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்.சி, ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படம் அப்படி ஒரு அனுபவத்தை ரசிகர்களுக்கு நூறு சதவீதம் தரும் விதமாக உருவாகியுள்ளது.

 

அடுத்தடுத்து வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர், ஜெய், சுந்தர்சி இருவரின் கதாபாத்திர போஸ்டர்கள் இவற்றுடன் தற்போது வெளியாகியுள்ள இந்தப்படத்தின் டீசரும் அதை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இதற்குமுன் வெளியான சைக்கோ த்ரில்லர் படங்களில் இருந்து நிச்சயம் மாறுபட்ட படமாகவும் இது இருக்கும் என்றும் தெரிகிறது.

 

1980களில் நடக்கும் இந்த சைக்கோ திரில்லர் கதையில் சுந்தர்.சி அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, முதன்முறையாக சைக்கோ வில்லனாக ஜெய் நடித்துள்ளார். எட்டு வருட இடைவெளிக்கு பிறகு இந்தப்படத்தில் நாயகியாக நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் மறு பிரவேசம் செய்துள்ளார் நடிகை ஹனி ரோஸ் தற்போது வெளியாகியுள்ள டீசரும் இந்த மூன்று கதாபாத்திரங்களை மையப்படுத்தியே உருவாகியுள்ளது. 

 

Pattampoochi

 

இவர்களுடன் இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் பத்ரி. கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை பென்னி ஆலிவர் மேற்கொள்கிறார். 

 

பத்ரி எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய, நவநீத் சுந்தர் இசையமைத்துள்ளார். பென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்ய, ராஜசேகர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். நரு. நாராயணன் மற்றும் மகா கீர்த்தி திரைக்கதை அமைத்துள்ளனர்.  அவனி டெலி மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரித்துள்ளார்.

 

Related News

8195

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...