கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் செல்வராகவன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘சாணி காயிதம்’. ‘ராக்கி’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் இப்படம் வரும் மே 6 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டீசரை அமேசான் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. டீசர் வெளியான ஒரு சில மணி நேரங்களில் வைரலாகியதோடு, ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
வித்தியாசமான அதே சமயம் அதிரடியான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது கதாப்பாத்திரம் குறித்து கூறுகையில், “இது வரை நான் நடித்த கதைகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமான கதை பாணியை ’சாணி காயிதம்’ கொண்டுள்ளது. அனுபவமில்லாத அதே சமயம் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். என்னுடைய பாத்திரமும், இயக்குநர் அருணின் தனித்துவமான கதை சொல்லும் பாணியும் தொலைநோக்குப் பார்வையும் தான் இந்த கடினமான படத்தின் ஒரு பகுதியாகப் நான் பங்கேற்க ஆர்வத்தை தூண்டியது. அதற்கு மேலாக, இயக்குநர் செல்வராகவன் உடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு மறக்க முடியாதது.” என்றார்.
இப்படம் குறித்து செல்வராகவன் கூறுகையில், “இந்தப் படத்துக்காக நான் முதல்முறையாக கேமராவின் முன்னால் நின்று நடித்ததால் ’சாணி காயிதம்’ எனக்கு ஸ்பெஷலான படமாகும். ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மற்றும் திறமையான கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கக் கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியைத் தந்தது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன், தனது துறையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் மற்றும் கதையிலும் கலைஞர்களிடமிருந்தும் முழுமையான திறனை வெளிப்படுத்தியுள்ளார். பிரைம் வீடியோவில் சாணி காயிதம் வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” என்றார்.
சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்குநராக பணியாற்ற நாகூரான் படத்தொகுப்பு செய்துள்ளார். திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, சித்தார்த் ரவிப்பட்டி கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...
இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...
யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...