தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சரத்குமார், இளம் ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், கெளதம் கார்த்திக் உடன் அவர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆதி, பிரகாஷ்ராஜ், நாசர் ஆகியோர் நடிப்பில் இளையராஜாவின் இசையமைப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் ‘கிளாப்’. இப்படத்தை பிம் பிரிண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த ஐ.பி.கார்த்திகேயன், திரிபுரா கிரியேஷன்ஸ் முரளிகிருஷ்ணா வங்கயாலபதி மற்றும் தாராஸ் சினிகார்ப் வெங்கட ஸ்ரீனிவாஸ் பொக்ரம் ஆகியோருடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் சரத்குமார் மற்றும் கெளதம் கார்த்திக் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
மதுதுரையை கதைக்களமாக கொண்ட ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான முறையில் உருவாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே 9 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
தட்சிணாமூர்த்தி ராமர் என்பவர் இயக்கும் இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், “கௌதம் கார்த்திக், சரத்குமார் சார் போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகர்களுடன் பணியாற்றுவது எனது கனவு நனவான தருணம். அவர்களின் பேரார்வமும் அர்ப்பணிப்புமிக்க திறமையும் கலந்த நடிப்பில், சினிமா அரங்குகள் கூஸ்பம்ப்ஸ் தருணங்களால் நிரம்பி வழியும் என்று நான் நம்புகிறேன். திரையுலகில் சரத் சாரை ரசித்து வளர்ந்த நான், அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை. நான் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை எழுதும்போது கூட, சரத் சாரை மனதில் வைத்திருந்தேன், ஆனால் அவர் என் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்று உறுதியாக தெரியவில்லை, கதையை விவரித்தவுடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஆச்சர்யம் தந்தார். இதுவரை சரத் சார் தனது படங்களில் நேர்மையான போலீஸ் வேடத்தில் நடித்ததை பார்த்திருக்கிறோம், ஆனால் இந்தப்படத்தில் அவர் மதுரையில் வாழும் ஒரு போலீஸ் அதிகாரியாக மதுரை வட்டார வழக்கு மொழியுடனும், உடல்மொழியுடனும் அவரது முந்தைய பாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாத்திரமாக நடிக்கவுள்ளார்.” என்றார்.
இப்படத்தை தொடர்ந்து பிக் பிரிண்ட்ஸ், திரிபுரா கிரியேஷன்ஸ் மற்றும் தாராஸ் சினிமார்ப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் மேலும் பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...