’தர்மதுரை’ படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதையை வைத்து படம் இயக்க ரெடியான சீனு ராமசாமி, அப்படத்திற்கு ‘மா மனிதன்’ என்று தலைப்பு வைத்தார். ஆனால், அப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால், அதற்கிடையே ஒரு பேய் படத்தை இயக்கும் திட்டத்தில் சீனு ராமசாமி இறங்கியுள்ளார்.
இந்த படத்தில் அதர்வாவை ஹீரோவாக்கியுள்ள சீனு ராமசாமி, ‘ஒரு ஜீவன் அழைத்தது’ என்று தலைப்பு வைத்துள்ளார். கிராமத்து பின்னணியில் நடக்கும் திகில் படமான இப்படத்தில் அதர்வா கல்லூரி மாணவர் வேடத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்திற்கான நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இப்படம் முடிந்த பிறகு விஜய் சேதுபதியை வைத்து சீனு ராமசாமி ‘மா மனிதன் படத்தை தொடங்க முடிவு செய்துள்ளார். அதேபோல் விஜய் சேதுபதியும் ‘ஜுங்கா’, ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களில் பிஸியாகியுள்ளதால், அப்படங்களை முடித்த பிறகே சீனு ராமசாமியின் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...