தூய்மைப் பணியாளர்களின் உலகத்தை மையமாகக் வைத்து உருவாகியிருக்கும் படம் ‘விட்னஸ்’.ருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தில் ரத்தா ஶ்ரீநாத், ரோகிணி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி. செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
தெலுங்கு மற்றும் கன்னடத் திரைத்துறைகளில் மாபெரும் வெற்றிப் படங்களைத் தயாரித்து வெளியிட்ட தி பீப்பிள் மீடியா பேக்டரி சார்பில் டி.ஜி.விஷ்வபிரசாத் விவேக் குச்சிபோட்லாவுடன் இணைந்து தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.
நகரத்தில் நடைபெறும் பல தினசரிக் குற்றங்களில் ஒன்று தான் இதுவும். இதற்கு முன் பலமுறை நடந்திருந்தாலும் ஒரு சிறிய அதிர்வைக் கூட இது ஏற்படுத்தியதில்லை. ஆனால் இம்முறை, பல்வேறு காரணங்களால் இதை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக நடக்கும் விசாரணையில், பல கண்ணியமான மனிதர்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வருகிறது.
இப்படத்தின் பர்ஸ்ட் குக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...