அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து சில ஆண்டுகள் ஆனாலும் இன்னும் ரிலீஸாகமல் இருக்கிறது. அமலா பால் ரொம்பவே எதிர்ப்பார்க்கப்பட்ட அப்படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் விநியோக உரிமையை வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் விஸ்வநாதன் மற்றும் சுனில் குமார் பெற்றிருக்கிறார்கள். இதன் மூலம் இவர்கள் திரைப்பட விநியோகத்துறையில் கால் பதிக்கிறார்கள்.
சினிமா விநியோகத்தில் இறங்குவது குறித்து வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர் மற்றும் தலைவர் ஸ்ரீ விஸ்வநாதன் கூறுகையில், “மனித உணர்வுகளை ஆழமாக ஆராய்ந்து, அவற்றை மகிழ்விக்கும், மாயாஜாலத்தை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த கருவியாக சினிமாவை நான் எப்போதும் போற்றுகிறேன். திரையுலகில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவது என்பது எனது நீண்ட நாள் கனவு, அது நனவாகியுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் (V Square Entertainment) இல் நாங்கள் இந்தப் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கும் சரியான குழுவைக் கொண்டுள்ளோம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். தொழில்துறையில் உள்ள வல்லுநர்களின் உதவியுடன் இது நடந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நல்ல மற்றும் தனித்துவமான உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களை நாங்கள் விநியோகிப்போம், மேலும் பார்வையாளர்கள் கொண்டாடுவதற்கும் பாராட்டுவதற்கும் சிறந்த வழியைக் கண்டறிவதை உறுதிசெய்வோம். எங்களின் முதல் திரைப்படமான அமலா பால் நடித்த ’அதோ அந்த பறவை போல’ பார்வையாளர்களாக எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த திரைப்படத்தின் அழகிய சிறு தொகுப்பு காட்சிகளால் நாங்கள் கவரப்பட்டோம், இது பான்-இந்திய மக்களை ஈர்க்கும் திறன் கொண்டது என்று நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக, இப்படத்தில் நடிகை அமலா பாலின் அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது. படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். திரைப்பட விநியோகத் துறையில் வெளிப்படைத்தன்மையே முக்கிய அம்சம் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம், மேலும் எங்களது வெற்றிகரமான பயணத்திற்கு இந்த மந்திரத்தை நாங்கள் உயிராக பின்பற்றுவோம்.” என்றார்.
‘அதோ அந்த பறவை போல’ படத்தை தொடர்ந்து மேலும் பல படங்களை விநியோகஸ் செய்யும் உரிமைகளை பெற்றிருக்கும் வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அப்படங்கள் பற்றி விரைவில் அறிவிக்க உள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...