சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா, ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்துவதோடு தனது அசத்தலான நடிப்பாலும் அந்த கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிம்ஹா, தற்போது சொந்தமாக திரைப்படங்கள் தயாரிக்க தொடங்கியிருக்கிறார். ‘வசந்த முல்லை’ என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்த வந்த சிம்ஹா தற்போது இரண்டாவதாக ஒரு படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக நடிக்கிறார்.
‘தடை உடை’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் என்.எஸ்.ராகேஷ் இயக்குகிறார். இதில் சிம்ஹாவுக்கு ஜோடியாக மிஷா நராங் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
முத்ராஸ் பிலிம் பேக்டரி மற்றும் ஆருத்ரா பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் பி. ராஜசேகர் மற்றும் ரேஷ்மி சிம்ஹா ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு டெமல் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆதிஃப் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். கணேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாக இருக்கும் ’தடை உடை’ படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. இதில் வைரமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...