சிவகார்த்திகேயன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி படங்களின் பாடல்களுக்கு எப்போதும் ரசிகர்களிடம் தனி வரவேற்பு கிடைத்து வருவதோடு, அப்பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து சூப்பர் ஹிட்டாவும் ஆகிவிடும். அந்த வகையில், வரும் மே 13 ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘டான்’ படத்தின் பாடல்களும் இப்போது தமிழகம் மட்டும் அல்ல உலகம் முழுவதும் பட்டைய கிளப்பி வருகிறது. அதிலும் சமீபத்தில் வெளியான “பிரைவேட் பார்ட்டி...” பாடல் இசையுலகில் முதலிடத்தை பிடித்து பல சாதனைகளை நிகழ்த்தி வகிறது.
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பாளர்களில் முக்கியமானவராக இருக்கும் சுபாஷ்கரன், தனது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் பல பிரம்மாண்ட படங்களையும், வெற்றிகளையும் கொடுத்து வருகிறார். சமீபத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ மூலம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியை கொடுத்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், அடுத்ததாக ‘டான்ம்’ படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க தயாராகி வருகிறது.
அனிருத் இசையில் ‘டான்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'ஜலபுலஜங்கு', கல்லூரி மாணவர்களிடம் திருவிழா கொண்டாட்டமாக மாறியது. அதைத் தொடர்ந்து 'பே' மற்றும் சமீபத்திய பாடலான - 'பிரைவேட் பார்ட்டி', ரசிகர்களை லூப்பில் கேட்க வைத்தன. ஒரு முழுமையான படைப்பாக, இந்த சீசனுக்கான திரைப்பட ஆர்வலர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பதிவுசெய்துள்ள ‘டான்’ படம் அடுத்தடுத்த பாடல்களின் ஹிட்டால் எதிர்பார்ப்பை இன்னும் உயர்த்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்த திரைப்படம் மே 13, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், திரைப்பட ஆர்வலர்கள், குறிப்பாக பொழுதுபோக்கை விரும்பும் திரைப்பட ரசிகர்கள் திரைப்படத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வது குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பார்வையாளர்களை திரையரங்குகளுக்குள் ஈர்ப்பதற்கு திரைப்படத்தின் சரியான வெளியீட்டு தேதியை கண்டுபிடிப்பதில் தயாரிப்பு நிறுவனம் மிகவும் ஆர்வமாக இருந்தது. ஏற்கனவே கோடை விடுமுறைகள் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், ‘டான்’ படம் குடும்ப பார்வையாளர்களை தியேட்டருக்கு இழுத்து வரும் என்பது உறுதியான ஒன்று. கேளிக்கை, இசை, பொழுதுபோக்கு, மேலும் பல கவர்ச்சிகளுடன் கூடிய ‘டான்’ திரைப்படம் ஒரு முழுமையான பொழுதுபோக்காக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, சிவகார்த்திகேயன் ஏற்கனவே தனது முந்தைய படங்களின் பாக்ஸ் ஆபிஸில் ஒரு அற்புதமான வசூலை நிரூபித்திருப்பதால், இந்த படத்திற்கு ஒரு பிரம்மாண்டமான வரவேற்பு இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...