Latest News :

இதுவரை யாரும் தொடாத கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘கடமையை செய்’
Thursday May-05 2022

எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘கடமையை செய்’. இதுவரை யாரும் தொடாத கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை எழுதி வேங்கட் ராகவன் இயக்கியிருக்கிறார். கணேஷ் எண்டர்டைன்மெண்ட் & நஹர் ஃபிலிம்ஸ் சார்பாக டி.ஆர்.ரமேஷ் & ஜாகிர் உசேன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

 

இதில், எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாகவும், யாஷிகா ஆனந்த் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன்,  வின்சென்ட் அசோகன் , சார்லஸ் வினோத் , சேஷு, ராஜா சிம்மன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

அருண்ராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் என்.பி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

 

சமீபத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த டி.ராஜேந்தர் அவர்கள் மிகவும் ரசித்து, நெகிழ்ந்து படக்குழுவினரை மனதார பாராட்டியதோடு இல்லாமல் இந்தப் படத்தை உலகமெங்கும் சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலமாக தானே வெளியிடுவதற்கு முன் வந்துள்ளார்.

 

 இந்தக் கோடை காலத்திற்கு குடும்பத்தோடு அனைவரும் கண்டுகளிக்க கூடிய மிக ஜனரஞ்சகமான திரைப்படமாக இருக்கும் என தெரிவித்ததோடு,  இப்படத்தை பார்த்து சென்சார் போர்டு இதற்கு  ' U' சான்றிதழ் அளித்துள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரைவில் திரையரங்குகளில் கண்டுகளித்து கொண்டாடக் கூடிய கமர்ஷியல் சக்சஸ் ஆக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

இப்படத்தில் பல புதுமையான விஷயங்களை சொல்லி காட்சிக்கு காட்சி சுவாரசிய படுத்தி உள்ளதாகவும் இது நிச்சயமாக ரசிகர்களை  மிகவும் கவர்ந்து மிகப்பெரிய அளவில் எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு பிரம்மாண்ட வெற்றி காணும்,  அளவிற்கு அனைவரும் தங்கள்  கடமையை செய்துள்ளதாக இயக்குனர் வேங்கட்ராகவன் தெரிவித்துள்ளார்.

Related News

8224

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery