ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தை ‘எனிமி’ படத்தை தயாரித்த எஸ்.வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
இதில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, மிக முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இவர்களுடன் சுனில் வர்மா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்கிறார். கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன், ரவிவர்மா ஆகியோர் இணைந்து இப்படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கின்றனர். உமேஷ் கலையை நிர்மாணிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...