பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளரான ஆரவை சக போட்டியாளரான நடிகை ஓவிய விரட்டி விரட்டி காதலித்ததை உலகமே அறியும். ஆனால், ஓவியாவை ஆரவ் உதாசினப்படுத்தியதால், மனநிலை பாதிக்கப்பட்டவரை போல பிக் பாஸ் வீட்டில் சுற்றுக்கொண்டிருந்த ஓவியா, ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள முயல, அதனால் ஏற்பட்ட சர்சையை தொடர்ந்து அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
போட்டியில் இருந்து ஓவியா வெளியேறினாலும், பிக் பாஸ் மூலம் தனக்கு கிடைத்த ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து தற்போது கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார்.
இந்த நிலையில், ஓவியா தன்னை காதலிப்பதை விளையாட்டாகத் தான் நான் ஏற்றுக்கொண்டேன், பிறகு தான் அவர் என்னை சீரியஸாக காதலிப்பதை நான் உணர்ந்தேன், என்று ஆரவ் கூறியுள்ளார்.
பிக் பாஸ் டைடிலை வென்ற ஆரவு, அளித்த பேட்டி ஒன்றில், “நான் கடந்த 9 வருடங்களாக தனியாகத்தான் வசித்து வருகிறேன். பிக் பாஸ் வீட்டிலும் அப்படியே தான் வசித்தேன். ஓவியா என்னை காதலிப்பதை நான் விளையாட்டாக நினைத்தேன். பிறகு அவரது காதல் தீவிரத்தை பிரிந்துக்கொண்டு, இது சரிவராது என்று கூறிவிட்டேன். ஆனால், நான் வெற்றி பெற்றதற்கு ஓவியா வாழ்த்தியுள்ளார்.
அதே போல், ஓவியாவுடன் சேர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் அதற்கு நான் ரெடி. ஹீரோவாக நடிப்பதோடு வில்லனாகவும் நடிக்க நான் ரெடி. கதாபாத்திரம் தான் முக்கியம். ஓவியாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவும் நான் ரெடியாக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...