தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பல தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள், இந்த ஓராண்டு சாதனைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, இரண்டு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார்.
அதில், ”ஓராண்டு நிறைவை தனது நன்மைகளால் பண்பின் தன்மையினால் நிறைவு செய்திருக்கும் மாண்புமிகுமு க ஸ்டாலின் அவர்களை நேசிக்கிறேன்.
இரண்டு கோரிக்கைகள் இதயத்தில் உண்டு,
சினிமா ரசனை கல்வியை நமது பாடதிட்டத்தில் இணைக்க வேண்டும். எது உண்மையான சினிமா கலை அதை எப்படி பார்க்க வேண்டுமெனவும் மாணவ பருவத்தில் அவர்களுக்கு கற்றுத் தருதல், உலகின் தலைசிறந்த படங்களின் வழியே பாடப்பிரிவுகள் உண்டாக்க வேண்டும், இது சினிமா தொழில் நுட்பக்கல்வி அல்ல. ரசனையை மேம்படுத்தும் கல்வி. இக்கோரிக்கையை ஆசான் பாலுமகேந்திரா கலைஞரிடம் முன்வைத்தார். அதையே அவர் புதல்வர் முதல்வரிடம் முன்வைக்கிறேன்.
கர்நாடகா போல தேசிய விருதுப்பெற்ற சினிமா கலைஞர்களுக்கு ஒரு வீடு அரசு வழங்க வேண்டும். அது சென்னையில் கூட அல்ல ஏனெனில் இங்கு விலை அதிகம் அரசுக்கு கூடுதல் செலவு. அவர்கள் பிறந்த மாவட்டத்தில் தந்தால் மகிழ்வேன். இவ்விரு கோரிக்கைகள் முதல்வரின் கரங்களில் சேர்ப்பிக்கிறேன்.
சினிமா ரசனை கல்வியை (Film Appreciation) மாணவ மாணவியரின் பாடப்பிரிவில் இலக்கியம், இலக்கணம், ஓவியம், போல வெகுமக்களை ஆட்கொண்ட சினிமாவையும் சேர்க்க வேண்டுமென மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு, அன்பில் மகேஷ் பாடநூல் பிரிவின் தலைவர் திரு திண்டுக்கல் லியோனி அவர்கள்தம் கவனத்திற்கு இணைக்கிறேன்.
சினிமா ரசனை கல்வியின் மூலம் ஒரு தலைமுறை பயன் பெறுமேயானால் திரைக்கலைஞர்களுக்கு காவடி தூக்கும் பக்தர்களாக, கட்-அவுட்களுக்கு பாலபிசேகம் செய்யும் பைத்தியம் தெளிந்து விசிலடிச்சான் குஞ்சுகள் எனும் போக்கு மாறி இளைய சமுதாயம் விமர்சன பூர்வமாக நிதர்னமான சினிமாவை ரசிக்கும் இனமாக மாறும்.” என்று கூறியுள்ளார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...