சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் நுழைந்த ஷீலா ராஜ்குமார், தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். ‘டூ லெட்’, ‘மண்டேலா’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவையும் கடந்து தென்னிந்திய சினிமாவையே கவனிக்க வைத்திருக்கும் ஷீலா ராஜ்குமார், தமிழ் மட்டும் இன்றி மலையாள சினிமாவிலும் பட்டைய கிளப்பி வருகிறார்.
தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில், ராஜ்குமார் இயக்கும் ‘பேட்ட காளி’ என்ற இணைய தொடரில் பேட்ட காளி என்ற வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் ஷீலா ராஜ்குமார், ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் பெண் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த இணைய தொடருக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இதை தொடர்ந்து படத்தொகுப்பாளர் ராஜா சேதுபதி தயாரிக்கும் ஜோதி என்ற படத்தில் நடிக்கும் ஷீலார் ராஜ்குமார், இது தவிர மேலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறாராம். அப்படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இன்னொரு பக்கம் மலையாளத்தில் ஏற்கனவே ’கும்பலாங்கி நைட்ஸ்’ என்கிற படத்தில் நடித்ததற்காக நிறைய பாராட்டுக்களை பெற்றவர், தற்போது மீண்டும் மலையாளத்தில் ’பெர்முடா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். ராஜீவ்குமார் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.
‘மண்டேலா’ படத்திற்குப் பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களும், ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தாலும் நல்ல கதைகளுடன் கூடிய படங்களும் தேடி வருவதால் மகிழ்ச்சியடைந்திருக்கும் ஷீலா ராஜ்குமாரின் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராக உள்ள படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...