சுயதீன இசை பாடல்களுக்கு மக்களிடையே கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் டிஜிட்டல் உலகில் அப்பாடல்களுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தாலும் பல பிரபலங்கள் அதுபோன்ற பாடல்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், ‘சார்பட்டா’ படம் மூலம் பிரபலமான சந்தோஷ் பிரதாப், ஐரா ஆகியோர் நடிப்பில் ‘லவ் யு பேபி’ என்ற சுயதீன பாடல் உருவாகியுள்ளது.
அனுகிரஹா எண்டெர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் எஸ்.காமாட்சி கனிமொழி தயாரித்துள்ள இந்த வீடியோ பாடலை பிரசாத் ராமன் இயக்க, பிரேம்ஜி அமரன் பாடியுள்ளார்.
மேலும் இப்பாடலில் ஷாஜகான் படத்தில் விஜய் காதலர்களை சேர்த்து வைப்பது போல ஒரு கான்செப்டை பாடலுக்குள் வைத்திருக்கிறார்கள். காதலர்களை சேர்த்து வைப்பவராக ராகுல் தாத்தா அசத்தி இருக்கிறார்.
இந்தப்பாடலை தனது தனித்துவ இசையால் அழகுப்படுத்தி இருக்கிறார் இசை அமைப்பாளர் ராக்கேஷ் அம்பிகாபதி. ”டசக்கு டசக்கு”, “வா மச்சானே” ஆகிய மெகா ஹிட் பாடல்களை எழுதிய முத்தமிழும், பிரசாத் ராமனும் இந்தப்பாடலை எழுதியுள்ளனர். சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரிச்சட் கிறிஸ்டோபர் நடனம் அமைத்துள்ள இந்த வீடியோ பாடலுக்கு தரணி பால்ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். மேக்கப் பணியை சுப்ரஜா வாசுதேவன் செய்துள்ளார். உடையலங்காரம் கெளசல்யா மாரிமுத்து, ஸ்டில் போட்டோஸ் கிப்டான் சந்துரு.
மிகவும் பாசிட்டிவ் மோட்-ல் தயாராகி இருக்கும் இப்பாடல் வரும் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...