சிவகார்த்திகேயன் நடிப்பில், அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டான்’ படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் லைகாவுடன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதோடு, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.
‘மாநாடு’ படத்திற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா மிரட்டலாக நடித்திருக்கும் ‘டான்’ படம் கல்லூரி மற்றும் பள்ளி பருவக்காலத்தை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கும் வகையில் உருவாகியிருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் வெளியிடும் ‘டான்’ நாளை (மே 13) உலகம் முழுவதும் வெளியாகிறது. தற்போது படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ‘டாக்டர்’ போல் ‘டான்’ படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...