எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளியாகி இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆன நிலையில், அப்படதின் டிஜிட்டல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட படங்களையும், இணைய தொடர்களையும் நேரடியாக வெளியிடுவதோடு, பல முன்னணி நடிகர்களின் படங்களின் டிஜிட்டல் உரிமத்தை பெற்று வரும் ஜீ 5 தளம் தான் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் டிஜிட்டல் உரிமையையும் பெற்றுள்ளது.
அதன்படி, வரும் மே 20 ஆம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரத்யேகமாக ஒளிபரப்பாக உள்ளது.
இந்த திரைப்பட வெளியீட்டு அறிவிப்பைக் குறிக்கும் வகையில் ஜீ5 தளத்தால் வெளியிடப்பட்ட புதிய மற்றும் பிரத்யேக டிரெய்லரால், தென்னிந்தியத் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் தென்னிந்திய மொழி பேசாத பார்வையாளர்களும் ஜீ5 தளத்தின் இந்த உலக டிஜிட்டல் பிரிமியரைப் பற்றி மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் அவர்கள் படத்தின் ஒரிஜினல் மொழியில் உருவான வசனங்களுடன் படத்தை சப் டைட்டிலுடன் பார்க்கலாம். மேலும்’ஆர் ஆர் ஆர்’’ திரைப்படம் ஜீ5 தளத்தில் TVOD-இல் கிடைக்கிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...