Latest News :

கேன்ஸ் திரைப்பட விழாவில் பா.இரஞ்சித்தின்’வேட்டுவம்’
Saturday May-14 2022

நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் பல தரமான படங்களை தயாரித்து வரும் இயக்குநர் பா.இரஞ்சித், ’பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு’, ’ரைட்டர்’, ’குதிரைவால்’,  ’சார்பட்டா பரம்பரை’ ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தற்போது ‘சேத்துமான்’, ‘ஜே.பேபி’, ‘பொம்மை நாயகி’, ‘நட்சத்திரம் நகர்கிரது’ ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இந்த படங்கள் ஒவ்வொன்றாக விரைவில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், தமிழ் சினிமாவை தாண்டி பிற மொழிகளிலும் படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ள இயக்குநர் பா.இரஞ்சித் அதற்காக நீலம் ஸ்டுடியோஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்துடன் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் முதல் படத்தை பா.இரஞ்சித் இயக்குகிறார். ‘வேட்டுவம்’ என்று தலைப்பில் உருவாகும் இப்படம் திரைப்படமாக மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடராகவும் உருவாக உள்ளது. 

 

மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட உள்ளது. இந்த நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட ‘வேட்டுவம்’ படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

 

பா.இரஞ்சித், அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, அதிதி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘வேட்டுவம்’ திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடரை அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் இதில் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள்.

 

இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Related News

8247

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery