விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரது நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை நிகழ்த்தியது.
திரையரங்குகளுக்கு லாபகரமான திரைப்படமாக அமைந்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ இப்போது டிஜிட்டல் தளத்திலும் வெளியாக உள்ளது. ஆம், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வரும் மே மாதம் 27 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ரிலீஸுக்கு முந்தைய கட்டத்திலேயே ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியதோடு, பாக்ஸ் ஆபீஸிலும் சிறந்த வெற்றியைப் பெற்றது. தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரின் நடிப்புடன், இயக்குனர் விக்னேஷ் சிவனின் அட்டகாசமான உருவாக்கமும், அசத்தலான திரைக்கதையும், அனிருத்தின் துள்ளலான இசையும் திரையரங்குகளில் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது. சென்டிமெண்ட், வேடிக்கை, காதல் மற்றும் சார்ட் பஸ்டர் பாடல்கள் என அனைத்து அம்சங்களும் அடங்கிய இப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இப்போது இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு வழங்குவதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறது. ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் சிறந்த காட்சி மற்றும் ஆடியோ அம்சங்களுடன் பார்வையாளர்களுக்கு வீட்டிலேயே திரையரங்கு அனுபவத்தை தரும்.
‘டாணாக்காரன்’ போன்ற் சிறந்த படைப்புகளை நேரடியாக வெளியிட்டு வரும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், திரையரங்குகளில் வெளியாகி மக்களிட வரவேற்பு பெற்ற ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற பொழுதுபோக்கு திரைப்படங்களையும் வெளியிட்டு மக்களின் அபிமான ஒடிடி தளமாக உருவெடுத்துள்ளது.
நயன்தாரா நடிப்பில் உருவாகி, சமீபத்தில் வெளியான டீசர் மூலம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'O2' திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் நேரடியாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...