Latest News :

ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்கும் சைக்கோ த்ரில்லர் படம் ‘ஒயிட் ரோஸ்’
Monday May-23 2022

ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்த ‘விசித்திரன்’ சமீபத்தில் வெளியான நலல் வரவேற்பை பெற்றது. அவரது வித்தியாசமான நடிப்பும், மூன்று கெட்டப்புகளுக்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் வெகுவாக பாராட்டப்பட்டது. இந்த நிலையில், ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் இன்று தொடங்கியது.

 

சைக்கோ த்ரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்திற்கு ‘ஒயிட் ரோஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கும் இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்க, மற்றொரு ஹீரோவாக தயாரிப்பாளர் ரூஸோ நடிக்கிறார். ‘கயல்’ ஆனந்த முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் முன்னாள்  தமிழக காவல்துறை உயரதிகாரி எஸ்.ஆர்.ஜாங்கிட் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிக்கிறார்.

 

என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார். வைரமுத்து பாடல்களை எழுத, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை டி. என். கபிலன் கவனிக்க, சண்டைப் பயிற்சியை பிரபு அமைக்கிறார். 

 

ஸ்டூடியோ 9 நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். கே .சுரேஷ், தயாரிப்பாளர் எஸ். ரூஸோவுடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் ஆரி உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், “அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி, சைக்கோ திரில்லர் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதையாக ‘ஒயிட் ரோஸ்’ உருவாகியிருக்கிறது.” என்றார். 

Related News

8266

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery