அரசியல் சம்மந்தமான படம் என்றாலே பதறும் பல நடிகர்கள் தற்போது அரசியல் படங்களில் நடிக்க பேரார்வம் கொண்டுள்ளனர். அதற்கு காரணம் தற்போதைய அரசியல் நிலையும், சமூக வலைதளங்களின் தாக்கமும்.
இதற்கிடையே, எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்ற நிலைக்கு மாறிவிட்ட கமல் ஹாசன், ஷங்கருடன் மீண்டும் இணைய உள்ளார். ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாக இருந்தாலும், இப்படத்திற்கான தலைப்பு மற்றும் கதை கரு கமலுடையது தான் என்று கூறப்படுகிறது.
அதேபோல், கமலும் தலைப்பு மற்றும் கருவை ஷங்கரிடம் கூற, அவரும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளாராம்.
‘2.0’ படத்தின் பணிகள் முழுவதுமாக முடிவடைந்ததும், கமல் சொன்ன கருவுக்கு திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட உள்ள ஷங்கரிடம் கமல் சொன்ன டைடில் ‘லீடர்’ கரு அரசியல். அரசியல் என்றால் சாதாரணமாக அல்ல, கமலுக்கு முதல்வர் வேடமும் இந்த படத்தில் உண்டு என்கிறது கோடம்பாக்கத்தின் கோடாங்கி.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...