இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 41 வது திரைப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து முடிந்த நிலையில், படம் தொடர்பாக பல வதந்திகள் வெளியானது. ஆனால், அதை மறுத்த சூர்யா தரப்பு, விரைவில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவித்தனர்.
இந்த நிலையில், இயக்குநர் பாலா - சூர்யா கூட்டணி அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயராகி வருகின்றனர். அதனை அறிவிக்கும் வகையில் இயக்குநர் பாலா மற்றும் சூர்யா இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதோடு, படம் தொடர்பாக எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்த படத்தில் மாறுபட்ட வேடத்தில் சூர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக டோலிவுட்டின் முன்னணி ஹீரோயின் கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். மற்றொரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் புதுமுகம் மமிதா நடிக்கிறார்.
பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மாயப்பாண்டி கலை இயக்குநராக பணியாற்ற, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்கிறார்.
2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...