சிவகார்த்திகேயன் நடிப்பில், அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணந்து தயாரித்த ‘டான்’ திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
அனிருத் இசையில் பாடல்கள் படம் வெளியாகும் முன்பே ஹிட்டான நிலையில், படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது மூன்றாவது வாரத்திலும் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கும் ‘டான்’ திரைப்படம் வரும் ஜூன் 10 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. திரையரங்குகளில் பெற்ற வெற்றியை போல் ஒடிடி தளத்திலும் டான் திரைப்படம் பல சாதனைகள் படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
‘டாக்டர்’ படம் ரூ.100 கோடியை வசூலித்திருந்த நிலையில் ‘டான்’ படமும் ரூ.100 கோடியை வசூலித்திருப்பதால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உயர்த்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...