கமல்ஹாசன் தயாரித்து நடித்திருக்கும் ’விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கியுள்ளது. படம் தணிக்கை செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது படத்தின் புரோமோஷனுக்காக உலகம் முழுவதும் சுற்றி வரும் கமல்ஹாசன், சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது ‘விக்ரம்’ மூன்றாம் பாகத்தில் நடிகர் விஜயை எதிர்ப்பார்க்களாமா? என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், 'விக்ரம் 3' படத்திற்காக ஏற்கெனவே ஒருவரை ஒப்பந்தம் செய்து வைத்துள்ளோம், என்றவர், விஜய் ஒப்புக் கொண்டால் அவரை வைத்து படம் தயாரிக்க ராஜ்கமல் பிலிம்ஸ் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.
’விக்ரம் 3’ பாகத்தில் ஹீரோ என்று கமல் சொன்னது சூர்யாவை தான். விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சூர்யா விக்ரம் மூன்றாம் பாகத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...