Latest News :

ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் ‘சுழல் - தி வோர்டெக்ஸ்’ இணைய தொடர்
Saturday June-04 2022

முன்னணி ஒடிடி நிறுவனமான அமேசான் பிரைம் சமீபத்தில் பல வெப் தொடர்களை அறிவித்தது. அதில் ஒன்று தான் ‘சுழல் - தி வோர்டெக்ஸ்’. இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி தயாரிக்கும் இத்தொடரை பிரம்மா மற்றும் அனுசரண்.எம் இணைந்து இயக்கியுள்ளனர்.

 

கதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, ராதாகிருஷ்ணன் பார்த்திபன் உள்ளிட்ட முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த இணைய தொடர் 8 பாகங்களாக உருவாகியுள்ளது. க்ரை த்ரில்லர் ஜனார் இணைய தொடரான இத்தொடர் வரும் ஜூன் 17 ஆம் தேதி தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

 

மேலும், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிய மொழி, போலிஷ், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ் லத்தீன் ஸ்பானிஷ், அரபு மற்றும் துருக்கிய. போன்ற வெளிநாட்டு மொழிகளில் டயலாக்குடனும், அத்துடன் சீனம், செக், டேனிஷ், டச்சு, பிலிப்பைன்ஸ், ஃபினிஷ், கிரேக்கம், ஹீப்ரு, ஹங்கேரியன், இந்தோனேஷியன், கொரியன், மலாய், நார்வேஜியன் போக்ம், ருமேனியன், ரஷியன், ஸ்வீடிஷ், தாய், உக்ரேனிய மற்றும் வியட்நாமிய மொழி உள்ளிட்ட பல வெளிநாட்டு மொழிகளில் சப்டைட்டில்களுடன் இத்தொடரை இந்தியா மற்றும் 240 நாடுகளில் பார்க்க முடியும்.

 

இந்த நிலையில், இந்த தொடரின் உலகளாவிய ப்ரீமியர் குறித்து அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் தற்போது நடைபெற்று வரும் IIFA வீக்கெண்ட் 2022-இல் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

இத்தொடர் குறித்து பேசிய புஷ்கர் மற்றும் காயத்ரி, “பொழுதுபோக்கு என்பது மொழிக்கு அப்பாற்பட்டது என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். பார்வையாளர்கள், இன்று உலகம் முழுவதிலுமிருந்து நல்ல கதைகளைக் கேட்கத் தயாராக இருக்கிறார்கள். அமேசானில் ஸ்ட்ரீமிங் ஆகும் சுழல் - தி வோர்டெக்ஸ் மூலம் நம் நாட்டின் சிறந்த உள்ளடக்கத்தை வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்லும் சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது. மேலும், IIFA போன்ற உலகளாவிய நிகழ்வில் இத்தொடரை வெளியிடும் வாய்ப்பைப் பெறுவது உண்மையிலேயே ஒரு கனவு நனவானது என்றே கூறலாம். அமேசான் பிரைம் வீடியோவிற்கும், IIFA குழுவிற்கும் இந்த சம்மதத்துக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மர்மம் நிறைந்த இக்கதை பார்வையாளர்களை இருக்கைகளின் விளிம்பில் வைத்திருக்கும். இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண். எம் கதையின் தீவிரத்தைப் பராமரிப்பதில் மகத்தான பணியைச் செய்துள்ளனர். மேலும் எங்களின் அற்புதமான நடிகர்கள் குழு, அவர்களின் ஆற்றல் நிரம்பிய நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.” என்றார்கள்.

 

அமேசான் பிரைம் வீடியோவின் இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித், ”இத்தொடரைப் படைத்த, புஷ்கர் மற்றும் காயத்ரி, இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண். எம் மற்றும் இத் தொடரின் முன்னணி நடிகர்கள் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் இணைந்து அறிவித்தனர். இப்புதிர் நிறைந்த கதை குறித்த ஒரு முன்னோட்டத்தை IIFA ராக்ஸ் நிகழ்வில் முன்னணி நடிகர்கள் தங்களது அற்புதமான நடிப்பின் மூலம் பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தினர்.

 

எங்களின் முதல் தமிழ் ஸ்கிரிப்ட் அமேசான் ஒரிஜினல் தொடரான சுழல் – தி வோர்டெக்ஸ், சஸ்பென்ஸ் நிறைந்த வலுவான உணர்ச்சிக் கோர்வையுடன் கூடிய தொடராகும். இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். இன்று பார்வையாளர்கள் இட மற்றும் மொழிகளின் எல்லைகளுக்கு அப்பால், நிகழ்ச்சியின் உண்மையான உள்ளடக்கத்தை ஆர்வத்துடன் வரவேற்க தயாராக இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். எனவே, உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்காக பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ’சுழல் – தி வோர்டெக்ஸ்’ தொடரை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோருடன் இது ஒரு மகிழ்ச்சியான ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பாகும், மேலும் பிரைம் வீடியோவில் சுழல் - தி வோர்டெக்ஸின் உலகளாவிய பிரீமியரை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி யடைகிறோம்.” என்றார்.

Related News

8288

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery