காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழும் நிலையில், பாலாஜி குடித்துவிட்டு தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக அவரது மனைவி நித்யா, போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, நித்யாவுக்கு சினிமா ஜிம் பயிற்சியாளர் ஒருவருடனும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர்களைக் கொண்டு தன்னை மிரட்டுவதாகவும் போலீஸில் புகார் அளித்த தாடி பாலாஜி, தான் மனைவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் கூறினார்.
இந்த நிலையில், தாடி பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கேட்டு, அவரது மனைவி நித்யா குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து கூறிய நித்யா, “பாலாஜியுடன் இனி சேர்ந்து வாழ்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை. என்னைப் பற்றி தேவையில்லாமல் அவதூறுகளை பரப்பி வருகிறார். அவர் கூறி இருப்பது போல யாருடனும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.
சப்-இன்ஸ்பெக்டர், ஜிம் பயிற்சியாளர் என 2 பேரின் பெயரை குறிப்பிட்டு அவர்களோடு என்னை தொடர்புபடுத்தி பேசியுள்ளார். இதனால் அவர்களது குடும்பத்திலும் பிரச்சினை. பாலாஜி கூறியது போல இவர்களோடு நான் பழகவில்லை என்பதை அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
எனது குழந்தையை என்னிடமிருந்து பிரிக்க முயற்சி நடக்கிறது. அவளை நானே நல்லபடியாக வளர்த்துக் கொள்வேன்.” என்று தெரிவித்துள்ளார்.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...