ஆர்.கே என்று சொன்னாலே தொழில்த்துறை மட்டும் அல்ல தமிழ் சினிமாத்துறையும் சற்று அதிர்ந்து தான் போகும். அப்படி ஒரு தனித்தன்மையோடு இரண்டு துறைகளிலும் தன்னுடைய முத்திரையை பதித்திருக்கும் வெள்ளை உடை வெற்றியாளராக திகழும் ஆர்.கே, கோலிவுட்டின் தற்போதைய பரபரப்பு செய்தியாக இருக்கும் நயன்தாராவின் திருமணத்தை பின்னுக்கு தள்ளி விட்டு தனது பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை பற்றி ஒட்டு மொத்த கோலிவுட்டே பேசும்படி செய்துவிட்டார்.
‘எல்லாம் அவன் செயல்’ என்ற தனது முதல் படத்திலேயே நல்ல நடிகர் என்ற பாராட்டை பெற்றதோடு ஆக்ஷன் ஹீரோவாகவும் களம் இறங்கி வரவேற்பை பெற்றவர், ‘வைகை எக்ஸ்பிரஸ்’ மூலாம் காமெடியிலும் தன்னை நிரூபித்தார். இப்படி சினிமாவுக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் அளவாக செய்து அனைவரிடமும் பாராட்டு பெற்ற ஆர்.கே திடீரென்று சினிமாவை விட்டு ஒதுங்கினாலும், தன்னுடைய பிற தொழில்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் மக்களிடம் இணைந்து பயணித்துக்கொண்டு தான் இருக்கிறார்.
இந்த நிலையில், கைகளில் ஒட்டாமல் நரைமுடிக்கு டை அடிக்கும் பிரச்சனைக்கு புதிய தீர்வாக ஆர்.கே கண்டுபிடித்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பு இவருக்கு உலகெங்கிலும் பல்வேறு விதமான அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது. குறிப்பாக இவரது இந்த கண்டுபிடிப்பை பாராட்டி அதை அங்கீகரிக்கும் விதமாக மலேசிய, நைஜீரியா, பிரேசில் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மூலமாக 18 முனைவர் பட்டங்கள் நடிகர் ஆர்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல மலேசியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான டத்தோ ஸ்ரீ பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற இந்த தயாரிப்பை கடந்த ஐந்து வருடங்களாக வெற்றிகரமாக மார்க்கெட்டில் உலா வரச்செய்து இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளார் ஆர்கே. உலகநாடுகள் இவரது கண்டுபிடிப்பை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என தீர்மானித்து அதற்கான வேலைகளில் இறங்கிய சமயத்தில், கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று ஒரே இடத்தில் 1005 பேரை இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்புவை பயன்படுத்த செய்து மிகப்பெரிய கின்னஸ் சாதனை நிகழ்த்தி இதன் தரத்தை நிரூபித்தார் ஆர்கே.
தற்போது அதற்கான அங்கிகாரம் தான் இவருக்கு அடுத்து அடுத்து கிடைத்து வருகிறது. குறிப்பாக இதற்காக இந்திய அரசிடமிருந்து இருபது வருடங்களுக்கான காப்புரிமையையும் பெற்றுள்ள ஆர்.கே, இந்த தகவலை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொள்ளும் விதமாக நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இதுவரை இப்படி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்ததில்லை, என்று சொல்லும் விதமாக சுமார் ரூ..40 லட்சம் விலையுள்ள அதிநவீன மோட்டார் சைக்கிளில் ஆர்.கே வர, அவரை பின் தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட பல சொகுசு கார்களும் வந்தது.
பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த பிரசாத் லேபில் போடப்பட்டிருந்த ரெட் கார்ப்பட்டில் ஆர்.கே-வின் மோட்டார் சைக்கிளும், சொகுசு கார்களும் வந்து நிற்க, அதை நூற்றுக்கணான பத்திரிகை புகைப்படக்காரர்களும், வீடியோ கிராபிரர்களும் படம் பிடிக்கும் காட்சியை பார்க்கும் போது, இது பத்திரிகையாளர் சந்திப்பா அல்லது சர்வதேச திரைப்பட திருவிழாவா, என்று யோசிக்க வைத்ததோடு, இந்த சம்பவம் குறித்து ஒட்டு மொத்த கோலிவுட்டே பேசும்படியும் செய்திருக்கிறது.
நிகழ்ச்சியில் பேசிய ஆர்.கே, “எப்போதும் சினிமாவில் என்னுடைய கவனம் இருந்துகொண்டேதான் இருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் காரணமாக சினிமாவில் எந்த ஒரு அடியையும் முன்னெடுத்து வைக்க முடியாத சூழல் இருந்தது. இப்போது நிலைமை சரியாகி விட்டதால் என்னுடைய அடுத்த படத்திற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும்
ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்காக நான் படம் எடுக்கப்போவதில்லை, என்னுடைய படம் எப்பொழுதும் தியேட்டர்களில் தான் வெளியாகும். திரையரங்குகளில் படம் பார்ப்பதற்காக படம் எடுப்பவன் நான், ஆர்ஆர்ஆர் கேஜிஎஃப் 2 படங்களின் பிரம்மாண்டத்திற்கு சற்றும் குறைவில்லாத வகையில் தான் என்னுடைய படங்களும் உருவாகின்றன அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன்”. என்று கூறினார்.
தலைமுடிக்கு டை அடிக்கும் பிரச்சனைக்கு மட்டுமல்ல இன்றைக்கு உலகத்தில் இன்னொரு தலையாய பிரச்சனையாக இருக்கும் குறட்டை பிரச்சினைக்கும் இவர் மருந்து கண்டுபிடித்துள்ளார் இதற்காக தான் கண்டுபிடித்துள்ள தயாரிப்பை கடந்த மூன்று வருடங்களாக மக்களிடத்தில் பயன்பாட்டிற்காக விட்டுள்ளார் ஆர்கே. எப்படி தனது விஐபி ஹேர் கலர் ஷாம்பூ இந்திய அரசின் காப்புரிமை கிடைத்ததோ அதேபோல குறட்டை பிரச்சனைக்கு தீர்வாக தான் கண்டுபிடித்த இந்த தயாரிப்புக்கும் காப்புரிமை கிடைக்கும் என உறுதியாக கூறுகிறார் ஆர்கே.
தன்னுடைய இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை விளம்பரப்படுத்துவதற்காக சினிமா பாணியில் இந்தியாவில் உள்ள ரயில் இன்ஜின்களில் வண்ண விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்தி உள்ளார் ஆர்கே. இப்படி மொத்தம் 50 ரயில் இன்ஜின்களில் தனது இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை விளம்பரப்படுத்த பட இருப்பதாக கூறியுள்ளார் ஆர்கே.
இத்துடன். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட ஏழை மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தனது அறக்கட்டளை மூலம் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார் நடிகர் ஆர்கே. ஒரு பக்கம் வியாபாரம், இன்னொரு பக்கம் சினிமா என்று இருந்தாலும் இதன் மூலமாக கிடைக்கும் தனது வருமானத்தில் 25 சதவீதத்தை ஏழை மக்களின் உதவிக்காக தனியாக ஒதுக்கி வைத்துவிடுகிறேன் என்கிறார் ஆர்கே.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...