பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகப்பெரிய அளவுக்கு பிரபலமாக ஓவியா மற்றும் ஆரவ் மற்றும் இவர்களது காதல் எப்பிசோட் மிக முக்கியமானதாகும்.
இதற்கிடையே, தமிழ் பிக் பாஸ் சீசன் ஒன்றின் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவரையும் ஓவியாவையும் ஹீரோ, ஹீரோயினாக வைத்து படம் எடுக்க சில இயக்குநர்கள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றவாறு, ஆரவும், ஓவியாவுடன் இணைந்து நடிக்க தான் ரெடி, என்று பேட்டி கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், ஓவியாவின் காதலை ஆரவ் நிராகரித்ததற்கு காரணம் ரைசா என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரைசா, பிக் பாஸ் வீட்டில் ஆரவுடன் எந்தவித நெருக்கமும் காட்டாமல் இருந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்த பிறகு, ஆரவுடன் தான் டேட்டிங் செய்து வருகிறார், என்று தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
தற்போது அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ஆரவும், ரைசாவும் ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...