திரைப்பட பாடல்களைப் போல் சுயாதீன தனி இசை பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருவதால் பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். மேலும் சரிகமா போன்ற முன்னணி நிறுவனங்கள் வெளியிடும் இதுபோன்ற பாடல்கள் திரைப்பட பாடல்களுக்கு நிகராக படமாக்கப்படுவதால் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில், செவன் ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில், சீதாராமன் முகுந்தன் இயக்கிய 'யார் அவள்' இசை வீடியோ பாடலை சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிடவுள்ளது.
மன அமைதியையும் மகிழ்ச்சியையும் பற்றி கனவு காணும் ஒரு சாதாரணப் பெண்ணின் பயணம் தான் 'யார் அவள்'.
இளையராஜாவின் இசையமைப்பில் 'அம்மா கணக்கு' படத்தின் மூலம் பாடகியாக கோலிவுட்டில் அறிமுகமான ஸ்ரீநிஷா ஜெயசீலன் இந்தப் பாடலை பாடியுள்ளார்.
மிஸ் தமிழ்நாடு 2021 மற்றும் மிஸ் சவுத் இந்தியா 2021 பட்டங்கள் வென்ற தச்சானி இந்த பாடலில் நடித்துள்ளார். ஆத்மார்த்தமான இந்த பாடலுக்கு ஏ கே சசிதரன் இசையமைத்துள்ளார்.
வி.மணிகண்டனுடன் விளம்பரங்களில் அசோசியேட்டாக இருக்கும் லெனின் இந்தப் பாடலின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
பாடலுக்கான நடனத்தை சாலமன் வடிவமைத்துள்ளார். பாடலின் வரிகளை பகவதி பி கே எழுதியுள்ளார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...