வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் அருள்நிதி ‘தேஜாவு’, ‘டி பிளாக்’ ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கும் நிலையில் தற்போது பெயர் வைக்கப்படாத ஒரு படத்திலும், ‘டிமாண்டி காலனி 2’ படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘தேஜாவு’ திரைப்படம் அவரது பிறந்தநாளான ஜூலை 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
வைட் கார்ப்பட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிப்பில், பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பி பிஜி முத்தையா இணை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அருள்நிதியுடன் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், மைம் கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். அருள்.இ படத்தொகுப்பு செய்ய, பிரதீப் தினேஷ் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். வினோத் ரவீந்திரன் கலையை நிர்மாணித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...