தமிழ் சினிமாவின் லேடு சூப்பர் ஸ்டார் என்று சொல்லக்கூடிய நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9 ஆம் தேதி படு விமர்சையாகவும், பரபரப்பாகவும் நடந்து முடிந்தது. சுமார் 7 வருடங்களாக காதலித்து வந்த இந்த காதல் ஜோடி, இல்லர வாழ்க்கையில் நுழைவது குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களுடைய திருமணம் தமிழ் சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என சுமார் 200 பேரை மட்டும் அழைத்து திருப்பதியில் திருமணத்தை நடத்த நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திட்டமிட்டனர். ஆனால், 200 பேர் கலந்துக்கொள்ள திருப்பதியில் அனுமதி இல்லை என்பதால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் திருமணத்தை நடத்தினார்கள்.
ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, கார்த்தி, விக்ரம் பிரபு உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்துக்கொண்டு மணக்களை வாழ்த்தினார்கள்.
திருமணம் முடிந்ததும் தம்பதியினர் திருப்பதி சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்தனர். அங்கிருந்து சென்னை புறப்பட்டவர்கள், மறுநாள் ஜோடியாக பத்திரிகையாளர்களை சந்தித்து, தங்களது சினிமா பயணத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, ”இதுவரை என சினிமா பயணத்தில் ஒத்துழைப்பு கொடுத்து என் வளர்ச்சிக்கு பெரிய பங்கு வகித்திருக்கிறீர்கள். உங்கள் ஆசியுடன் இல்லவர வாழ்வில் இணைகிறேன், உங்களை ஆசி எங்களுக்கு எப்போதும் வேண்டும், நன்றி” என்றார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசுகையில், “நான் நயன்தாராவை முதன் முதலில் சந்தித்து கதை சொன்ன இடம் இது தான். அதனால் தான், நயன்தாராவும், நானும் உங்களை இந்த இடத்தில் சந்தித்திருக்கிறோம். இந்த இடமும், நீங்களும் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் நன்றி.” என்றார்.
அதாவது, சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தான் விக்னேஷ் சிவன் நயன்தாராவை தனிப்பட்ட முறையில் சந்தித்து ‘நானும் ரவுடி தான்’ கதையை சொன்னாராம். அப்படத்தின் போது தான் இவர்களுக்குள் காதல் மலர்ந்து, வளர்ந்து தற்போத் தம்பதிகளாகியிருப்பதால், அதே இடத்தில் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...