ஜீ5 தளம் தொடர்ந்து, வெற்றிகரமான தொடர்களான விலங்கு, அனந்தம், கார்மேகம் என பல வெற்றி ஒரிஜினல் படைப்புகள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த அதிரடி ஒரிஜினல் தொடரான ‘ஃபிங்கர்டிப் சீசன் 2’-வை தற்போது அறிவித்துள்ளது. இந்த தொடரை அருண் குமார் மற்றும் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் தயாரித்துள்ளனர், சிவாகர் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க, மாரிமுத்து, வினோத் கிஷன், கண்ணா ரவி, ஷரத் ரவி, திவ்யா துரைசாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 17, 2022 அன்று ‘ஃபிங்கர்டிப்’ சீசன் 2 வெளியாவதை ஒட்டி இந்தத் தொடரின் நடிகர்கள் மற்றும் குழுவினர், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்தனர்.
சிஜு பிரபாகரன், ஜீ5 கிளஸ்டர் ஹெட் பேசுகையில், “சமூக வலைதளம் மற்றும் அதன் ஆபத்தை பற்றி எடுக்கும் தொடர்கள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும். தற்போதைய டிஜிட்டல் உலகில் நடக்கும் சம்பவங்களை சுற்றியே இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடித்துள்ள நடிகர் கண்ணா ரவி சிறப்பான நடிப்பை அளித்துள்ளார். இந்த தொடரின் இறுதி பதிப்பை பார்த்த பிறகு நாங்கள் மிகவும் சந்தோசமாக இருக்கிறோம். தொடர் மிக நன்றாக வந்துள்ளது. நீங்கள் பார்த்து உங்கள் ஆதரவை தர வேண்டும்.” என்றார்.
ஜீ5 தளம் சார்பில் கௌசிக் நரசிம்மன் பேசுகையில், “இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம் எவ்வளவு நல்லதோ, அதே அளவு ஆபத்தும் அதில் இருக்கிறது என்று கூறுவதே இந்த தொடர். அனைவரும் அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளனர். இயக்குநர் சிறப்பான தொடரை கொடுத்துள்ளார். உங்கள் ஆதரவுக்கு நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் அருண் பேசுகையில், “இயக்குனர் சிவாகர் தான், நான் தயாரிப்பாளராக மாற காரணம். இந்த தொடரில் பணிபுரிந்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. தொழில்நுட்ப குழுவின் முழு முயற்சியில் தான் இந்த தொடர் உருவானது. அனைவரும் உங்களது ஆதரவை தர வேண்டும்.” என்றார்
இயக்குநர் சிவாகர் ஶ்ரீனிவாசன் பேசுகையில், “கொரோனா தடங்கல்களை கடந்து இந்த தொடரை நாங்கள் முடித்துள்ளோம். அதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தான் காரணம். படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் அவர்களது கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஜீ5 சார்பில் வந்த பல பரிந்துரைகள் இந்த தொடரை செதுக்கியது. இந்த தொடரில் கதாபாத்திரங்களின் வசனமும், காட்சிகளும் சிறப்பாக அமைய காரணம் எழுத்தாளர் ரோஹித். இந்த தொடர் ஒரு தொழில்நுட்ப திரில்லர், நாம் தினமும் காண்பதை திரையில் காட்ட முயற்சித்து இருக்கிறோம். உங்களுக்கு இந்த தொடர் பிடிக்கும் என நம்புகிறேன், உங்கள் ஆதரவு தேவை. நன்றி.” என்றார்.
நடிகர் பிரசன்னா பேசுகையில், “ஃபிங்கர் டிப் முதல் சீசன், மிகவும் ஆழமாகவும், ஈர்க்கும் வகையில் இருந்தது. அந்த தொடரின் இயக்குனர் என்னை அணுகி, இந்த கதையை சொன்ன போது எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக தெரிந்தது. அனைவராலும் மொபைல் இல்லாமல் இருக்க முடியாத சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். இன்றைக்கு தொழில்நுட்பம் நம்மை எவ்வளவு தூரம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, இதில் என்ன ஆபத்து இருக்கிறது என்பதை சொல்வது தான் இந்த தொடர். இந்த தொடரின் வெளியீட்டில் நான் ஆர்வமாய் இருக்கிறேன். இந்த தொடர் உங்களுக்கு பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.
நடிகை ரெஜினா கசாண்ட்ரா பேசுகையில், “இந்த கதை நாம் தினமும் கடந்து செல்லும் விஷயத்தை திரையில் பார்ப்பது போல் இருக்கும். ஒரு விஷயத்தை எல்லோருடைய பார்வையில் பார்ப்பது போல் இருக்கும். இந்த சீரியலில் நான் நடிகையாகவே நடித்துள்ளேன். நடிகைக்கு இருக்கும் சிக்கல்களை காட்டும் கதாபாத்திரமாக அது இருக்கும். பல சிக்கல்களை கடந்து இந்த தொடரை நாங்கள் எடுத்துள்ளோம். நான் 15 வருடங்கள் கழித்து பிரசன்னா உடன் நடித்துள்ளேன். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இது போன்ற கதைகளை எடுத்து, அதை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சிக்கும் ஜீ5-க்கு நன்றி.” என்றார்.
நடிகை அபர்ணா பாலமுரளி பேசுகையில், “ஃபிங்கர் டிப் தொடருக்கு என்னை அழைத்த போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இது போன்ற கதைக்களத்தை எடுப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும். பல நிஜ சம்பவங்களை திரையில் பார்ப்பது போல் இந்த தொடர் இருக்கும். இது எனது முதல் வலைத்தொடர். இயக்குநர் இந்த கதையை சிறப்பாக சொல்லியுள்ளார், இந்த கதை எல்லோரும் சம்பந்தபடுத்தி கொள்ளும்படியான ஒரு கதையாக இருக்கும். இந்த தொடரை பார்த்து உங்கள் ஆதரவை எங்களுக்கு தாருங்கள்.” என்றார்.
திரைக்கதை எழுத்தாளர் ரோஹித் பேசுகையில், “இந்த தொடரின் முதல் சீசன் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதன் இரண்டாவது பாகத்தை நான் எழுதுவது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த தொடரில் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். நீங்கள் இந்த தொடரை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.” என்றார்.
இசையமைப்பாளர் தீனதயாளன் பேசுகையில், “இந்த தொடரில் இசையமைப்பது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்களித்த இயக்குனருக்கு நன்றி. தயாரிப்பாளர் அருண் மற்றும் ஜார்ஜ் என்னை நம்பியதற்கு நன்றி. இதில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். தொடரைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.” என்றார்.
நடிகர் வினோத் கிஷன் பேசுகையில், “இயக்குனர் சிவாகர் உடன் பணிபுரிவது மகிழ்ச்சி. இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம், எல்லோரும் நிஜ வாழ்க்கையில் கடந்து செல்லும் ஒரு கதாப்பாத்திரமாக இருக்கும். அது கண்டிப்பாக அதிர்வலையை ஏற்படுத்தும். உங்களது ஆதரவு எங்களுக்கு தேவை. நன்றி.” என்றார்.
நடிகர் கண்ணா ரவி பேசுகையில், “என்னை நம்பிய இயக்குனருக்கு நன்றி. இந்த கதாபாத்திரம் எனக்கு நெருக்கமான கதாபாத்திரம். இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்கள் உடனும் நான் பணியாற்ற விரும்பினேன், இந்த தொடரில் எல்லோருடன் சேர்ந்து பயணித்தது மகிழ்ச்சி. படக்குழுவின் முழு ஈடுபாடு இல்லாமல் இந்த தொடரை முடித்திருக்க முடியாது. எனக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு நன்றி.” என்றார்.
நடிகை திவ்யா துரைசாமி பேசுகையில், “இந்த தொடரில் நான் இருப்பது மகிழ்ச்சி. இந்த தொடரின் இயக்குனர் சிவாகர் உடன் பயணித்தது பெரிய அனுபவமாக இருந்தது. ஜீ5-யில் சுவாரஸ்யமிக்க பல தொடர்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இந்த தொடரும் இருக்கும். நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தர வேண்டும்.” என்றார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...