தயாரிப்பாளர், நடிகை மற்றும் தொழில் முனைவர் என பன்முக திறன் கொண்ட லக்ஷ்மி மஞ்சு, சினிமாவில் பிஸியாக வலம் வருகிறார்.
தற்போது ஒரு திரைப்படத்தை தயாரித்து நடித்து வந்த லக்ஷ்மி மஞ்சு, கடந்த சில மாதங்களாக ஓய்வு இன்றி பட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது தனது பட பணிகளை முழுவதுமாக முடித்து விட்டார்.
இந்த நிலையில், பட பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்துடன் கர்நாடக மாநிலத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அதன்படி, தனது தந்தை நடிகர் மோகன் பாபு, சகோதரர் மனோஜ் உள்ளிட்ட தனது குடும்பத்துடன் கர்நாடகாவில் இருக்கும் நடிகை லக்ஷ்மி மஞ்சு, அங்கு தனது மகள் மற்றும் கணவரின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.
லக்ஷ்மி மஞ்சுவின் கோடை விடுமுறை சுற்றுலா மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டம் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...