’தென்மேற்கு பருவக்காற்று’, ‘தர்மதுரை’, ‘நீர்ப்பறவை’ போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் நடித்துள்ள படம் ‘மாமனிதன்’. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கும் இப்படத்திற்கு முதன் முறையாக யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளது.
ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் ஜூன் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான ஆர்.கே.சுரேஷ், தனது ஸ்டுடியோ 9 நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ‘மாமனிதன்’ படத்தை வெளியிடுகிறார்.
இந்த நிலையில், தமிழக திரைத்துறையில் முன்னோடிகளாக மக்களால் இன்றும் மாமனிதர்களாக போற்றப்படும் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் மற்றும் டாக்டர்.கலைஞர் ஆகியோரது சிலைக்கு இயக்குநர் சீனு ராமசாமி மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இது குறித்து கூறிய இயக்குநர் சீனு ராமசாமி, “இந்த தமிழ் சினிமாவின் மாமனிதர்கள் எனக்குள் உண்டாக்கிய கலை உணர்வுக்கு நன்றி கூறும் விதமாக என் அன்பை மலர்களாக சமர்ப்பித்தேன்.” என்றார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...