ஆக்ஷன் மற்றும் ஹாரர் படங்களின் வருகை அதிகரித்ததால் மக்கள் குடும்பமாக தியேட்டருக்கு வரும் சூழல் சமீபத்தில் இல்லாமல் இருந்த நிலையில், அந்த சூழ்நிலையை மீண்டும் உருவாக்கியுள்ளது ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம்.
ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை என்.ஜே.சரவணனனுடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை தயாரித்து வரும் ஜீ ஸ்டுடியோஸ், பேவீவ் புரொஜக்ட்ஸ் சார்பில் போனி கபூர் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பெரியவர்கள், சிரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ள இப்படத்தை ஊடகங்கள் பாராட்டியது ஒரு பக்கம் இருந்தாலும், படம் பார்த்த பொதுமக்கள் அனைவரும், படம் நல்லா காமெடியாக இருப்பதோடு, குடும்பமாக பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாகவும் இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.
ஆர்ஜே பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு தனது வழக்கமான காமெடி காட்சிகள் மற்றும் சமூக பொறுப்புடனும் படத்தில் பல வசனங்களை பேசியிருப்பது, சத்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோரது கெமிஸ்ட்ரி மற்றும் நடிப்பு என படத்தில் இடம்பெற்றுள்ள ஏராளமான விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதோடு, கதைக்களம் வித்தியாசமான முறையில் இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இதன் மூலம் ‘வீட்ல விசேஷம்’ ஓடும் தியேட்டர்களில் குடும்பமாக ரசிகர்கள் வருவது அதிகரித்திருப்பதோடு, சிரிப்பு சத்தத்தால் தியேட்டரும் அதிர்கிறது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...