Latest News :

தேசிய விருது பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ மலையாளப் படம் தமிழில் ரிலீஸ்
Monday June-20 2022

மலையாளத்தின் பிரபல இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ’ஜல்லிக்கட்டு’  படம் கடந்த 2019 ம் ஆண்டு வெளியானது. கேரள அரசின் விருது பெற்ற இந்த படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. சிறந்த ஒளிபதிவிற்காக இப்படம் தேசிய விருதினையும் வென்றுள்ளது. மேலும் ஆஸ்கர் விருத்திற்காகவும் தேர்ந்தெடுத்து பரிந்துரை செய்யப்பட்டது. இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சாபுமோன் அப்து சமது ,சாந்தி பாலச்சந்திரன்  ஆகியோர்  நடித்திருந்தனர். 

 

கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்காக ஒளிப்பதிவு செய்து தேசிய விருதினை பெற்றுத்தந்தார். தீப்பு ஜோசப் இப்படத்திற்கு பின்னணி இசையை உருவாக்கியுள்ளார். மாபெரும் வெற்றி மற்றும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் தமிழ் உரிமையை AR என்டர்டைன்மெண்ட்ஸ்  தயாரிப்பாளர் அமித் குமார் அகர்வால் கைப்பற்றி தமிழில் டப்பிங் செய்து தற்போது அமேசான் பிரைமில் வெளியிட்டுள்ளார்.

 

கேரளாவில் ஒரு மலையோர கிராமத்தில் இறைச்சிக்காகக் கொண்டு வரப்படும் ஒரு எருமை, கட்டை அவிழ்த்து ஓடுகிறது. அந்த எருமையை ஊர் மக்களே சேர்ந்து பிடிப்பது தான் இந்தப் படத்தின் கதையாகும். மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான இப்படம் தற்போது தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது .

Related News

8325

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery