சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள உள்ளாட்சி கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்கங்கள் இன்று முதல் மூடப்படுகிறது.
தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரியும், தமிழ் அல்லாத மற்ற மொழி திரைப்படங்களுக்கு 20 சதவிகித வரியும் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி, இந்த வரி செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஜி.எஸ்.டி 28 சதவீத வரி கட்டும் திரைத்துறையின், இந்த கூடுதல் கேளிக்கை வரிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த இரட்டை வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மல்டிபிளக்ஸ் அசோஷியேசனில் உள்ள பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகள் இன்று முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையில் உள்ள பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் இன்று முதல் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம், மற்ற திரையரங்குகளில் திரைபப்டங்கள் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...