ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி ஆகியோரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘வீட்ல விசேஷம்’ அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. மிகப்பெரிய படங்களுக்கு மத்தியில் வெளியானாலும் இப்படத்தை பார்த்த அனைவரும் படம் குறித்து பாசிட்டிவாக விமர்சித்து வந்ததால் நாளுக்கு நாள் இப்படத்திற்கான வரவேற்பு அதிகரித்து தற்போது இரண்டாவது வாரத்தில் அடியெத்து வைக்கிறது.
தற்போதைய சூழலில் ஒரு வாரம் ஒரு படம் ஓடினாலே வெற்றியாக கருதப்படும் நிலையில், ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் நாளை முதல் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் படக்குழுவினர் படம் மிகப்பெரிய லாபம் கொடுத்ததையும் கொண்டாடி வருகின்றனர்.
இப்படத்தில் ஹீரோவாக நடித்ததோடு என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கவும் செய்திருக்கும் ஆர்ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்து தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்திருப்பதோடு, அனைத்து படங்களும் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் லாபம் கொடுத்த படங்களாக அமைந்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இந்த நிலையில், ‘வீட்ல விசேஷம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர்ஜே பாலாஜி, “இன்று எங்களின் குழு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. வீட்ல விசேஷம் திரைப்படம் வெற்றி படமாக அமைந்திருப்பதோடு, லாபகரமான படமாகவும் அமைந்திருக்கிறது. எனக்கு பொதுவாக எண்ணிக்கையில் நம்பிக்கையில்லை. நாம் எடுக்கும் படம் குறிப்பிட்ட சிலரை மகிழ்வித்தாலோ அல்லது அந்த படம் சொல்லும் விஷயம் மற்றவர்களை பாதித்தாலோ அதுவே வெற்றி தான். இருந்தாலும் சினிமா ஒரு வியாபாரம் என்பதால், வெற்றியை எண்களாகவும் பார்க்கிறோம். அதன்படி பார்த்தால் இன்றைய சூழலில் வீட்ல விசேஷம் மிகப்பெரிய லாபத்தை கொடுத்த படமாக அமைந்திருக்கிறது.
‘எல்.கே.ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’ படங்களும் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. அந்த இரண்டு படங்களை தொடர்ந்து ‘வீடல் விசேஷம்’ படமும் லாபம் தந்திருப்பது எனக்கு மட்டும் அல்ல எனது குழுவுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. நாங்கள் சிறு குழு, எங்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் நாங்கள் படம் எடுக்கிறோம். அப்படிப்பட்ட படங்கள் பலருக்கு லாபம் தருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. பெரிய படங்கள் ஓடிக்கொண்டிருந்தாலும், அதனுடன் எங்கள் படமும் ரசிகர்களை கவர்ந்திருப்பது மகிழ்ச்சி.
‘வீட்ல விசேஷம்’ படத்தை பார்த்துவிட்டு பலர் பாராட்டினார்கள். படம் காமெடியாக இருக்கிறது, கவலையை மறக்க முடிகிறது, என்றெல்லாம் கூறினார்கள். ஒரு வீட்ல அப்பா இறந்துவிட்டார். அவருடைய மகனும், அம்மாவும் மன அழுத்தத்தால் தூக்கம் இல்லாமல் ஒரு வருடமாக தவித்து வந்துள்ளனர். வீட்ல விசேஷம் படத்தை பாத்துவிட்டு அவர்களுடைய மன அழுத்தம் சரியாகி அவர்கள் நல்லா தூங்கியதாக சொன்னார்கள். அவர்கள் என்னை சந்திக்க முடியுமா என்றும் கேட்டனர். அவர்கள் வீட்டுக்கு போனேன், அவர்களிடம் பார்த்த அந்த மகிழ்ச்சி தான் என் வெற்றி. அதை தான் நான் வெற்றியாக பார்க்கிறேன். இருந்தாலும் சினிமாவுக்கு என்று ஒரு வியாபாரம் இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் ‘வீட்ல விசேஷம்’ மிகப்பெரிய லாபம் தந்த படம்.
இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக போனி கபூர் சாருடன் இணைந்து தயாரித்த ராகுல், ஒரு தயாரிப்பாளராக அல்லாமல் ஒரு சாதாரண ஊழியராக இந்த படத்தில் பணியாற்றினார். அவருடைய உழைப்பும் இந்த வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். அவருக்கும் என் நன்றி.” என்றார்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...