நல்ல நல்ல திரைப்படங்களில் நடித்தும் முன்னுக்கு வர முடியாமல் தவிக்கும் ஹீரோக்களில் முக்கியமானவர் அருள்நிதி. பெரிய இடத்து பிள்ளையாக இருந்தாலும் பெரிய வெற்றிக்காக பல வருடங்களாக போராடி கொண்டிருப்பவர், கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். அதன்படி, ’டைரி’, ‘தேஜாவு’, ‘டி பிளாக்’ என்று அறிமுக இயக்குநர்களின் படங்களில் அருள்நிதி நடித்திருக்கும் படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றது. இதில் ‘டி பிளாக்’ என்ற படம் வரும் ஜூலை 1 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், அருள்நிதி ஆசை ஆசையாக ஒப்புக்கொண்ட புதிய படம் ஒன்றினால் மோசம் போன தகவல் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய மீசையுடன் புதிய கெட்டப்பில் அருள்நிதி இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. ’ராட்சசி’ பட இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில் கிராமத்து இளைஞனாக அருள்நிதி நடிக்கும் புதிய படத்திற்கான கெட்டப் தான் அந்த பெரிய மீசை.
அப்படத்தின் கதை அருள்நிதிக்கு மிகவும் பிடித்ததால் மற்ற படங்களின் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு அந்த படத்தின் படப்பிடிப்புக்காக பெரிய மீசை வளர்த்து தயாராகி விட்டார். அதன்படி அப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சுமார் 50 நாட்களில் முடிக்க திட்டமிட்டு படக்குழு பரமக்குடி பக்கம் போனார்கள்.
ஆனால், போன வேகத்தில் அருள்நிதி மீண்டும் சென்னைக்கு திரும்பிவிட்டாராம். காரணம், படப்பிடிப்பின் முதல் நாளில் இருந்தே தொழிலாளர்களுக்கு சரியான ஊதியம் கொடுக்கவில்லையாம். மேலும், படப்பிடிப்புக்கு தேவையான வசதிகளையும் முறையாக செய்துகொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் மீது புகார் எழுதுள்ளது.
படப்பிடிப்பு தொடங்கி 5 வது நாளில் சில தொழிலாளர்கள் படப்பிடிப்புக்கு வரமாட்டோம் என்று கூறி அறையிலேயே தங்கி விட்டார்களாம். இந்த தகவல் அறிந்த அருள்நிதி ரொம்பவே அப்செட்டாகி, உடனே அங்கிருந்து சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டாராம்.
படப்பிடிப்பு இருக்கும் அத்தனை பிரச்சனைகளையும் சரி செய்தால் தான் மீண்டும் வருவேன், என்று கூறியவர் நல்ல கதை என்று ஆசைப்பட்டு நடிக்க வந்தால் இப்படி மோசம் செய்து விட்டார்களே என்று தனது நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம்.
இந்த படத்தை ‘ஜிப்ஸி’ போன்ற படங்களை தயாரித்த திமுக எம்.எல்.ஏ அம்பேத்குமார் தனது ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...