சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்திற்கு சிம்பு இசயமைத்து வருகிறார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்த நிலையில், பீப் பாடல்கள் மூலம் இணைந்த சிம்பு - அனிருத் கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இவர்கள் ‘சக்க போடு போடு ராஜா’ படத்திற்காக இணைந்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் 'கலக்கு மச்சான்...' எனத் தொடங்கும் ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிருத்தை பாட வைத்திருக்கிறார் சிம்பு. சிம்பு இசையில் அனிருத் பாடிய 'கலக்கு மச்சான்...' பாடலின் சிங்கிள் ட்ராக் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.
பீப் பாட்டால் போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என்று அலைந்துக் கொண்டிருந்த சிம்புவும், அனிருத்தும் இந்த கலகக்கு மச்சான்...பாட்டால் எங்கெல்லாம் அலையப்போகிறார்களோ! என்று சிலர் கிண்டலாக பேசு வருகிறார்கள்.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...