மதிமுக-வின் பொதுச் செயலாளர் வைகோ விரைவில் தமிழ் சினிமாவுக்குள் தயாரிப்பாளராக நுழைவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அரசியல் தலைவர்களோ அல்லது அவர்களது வாரிசுகளோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே தங்களது பங்களிப்பை அளித்து வருவதோடு, தங்களது பணத்தை முதலீடும் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இதுவரை திரைப்படம் பார்ப்பதில் மட்டுமே சினிமாவுக்கும் தனக்குமான தொடர்பை வைத்திருந்த வைகோ, இனி தன்னையும் ஒரு சினிமாக்காரராக வெளிக்காட்டிக்கொள்ளப் போகிறார். விரைவில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ள வைகோ, அதன் மூலம் பல படங்களை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மதிமுகம் என்ற தொலைக்காட்சியை வைகோ நடத்தி வருகிறார். அந்த தொலைக்காட்சிக்காக திரைப்படங்களின் வீடியோ மற்றும் பாடல் காட்சிகளை பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், அவற்றில் முதலீடு செய்யும் பணத்தை வைத்து சொந்தமாக படம் தயாரித்தால், அந்த திரைப்படங்களை தமது தொலைக்காட்சிக்கு பயன்படுத்திக் கொள்வதோடு, திரைப்படங்களை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பலாம், என்று வைகோவிடம் சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள். நீண்ட நாட்களாகவே இது குறித்து ஆலோசனை நடத்தி வந்த வைகோ இறுதியாக திரைப்படங்கள் தயாரிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாரம்.
தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் உள்ளிட்ட விபரங்களை விரைவில் அவர் அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...