‘உறியடி’ படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானவர் விஜய்குமார். முதல் படத்திலேயே தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக அறிமுகமாகி பிரபலமான விஜய்குமார், ‘உறியடி 2’ படத்தை இயக்கி ஹீரோவாக நடித்தார். இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்தது.
இதையடுத்து சூர்யா நடித்து தயாரித்த்ஹ ‘சூரரைப் போற்று’ படத்திற்கு வசனம் எழுதிய விஜய்குமார், அறிமுக இயக்குநர் அப்பாஸ் அ.ரஹமத் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான விஜய்குமார் ஹீரோவாக நடித்து வந்தார்.
ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரிக்கும் இப்படம் ஆக்ஷன் ஜானர் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து பின்னணி வேலைகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழு, விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ் லுக்கை வெளியிட உள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...