Latest News :

ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி வாரியர்’ படத்தின் மாஸ் டிரைலர் வெளியானது
Monday July-04 2022

நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் வரவிருக்கும் அதிரடி படமான “தி வாரியர்” படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை N லிங்குசாமி இயக்கியுள்ளார்,  இப்படம் ஜூலை 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த இருமொழி திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சிட்துரி தனது தயாரிப்பு நிறுவனமான Srinivasa Silver Screen சார்பில் தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்.

 

படத்தினை அடுதடுத்து அசத்தலான விளம்பரங்கள் மூலம் ரசிகர்களிடம் ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகின்றனர் படக்குழுவினர். ஏற்கனவே வெளியான சார்ட்பஸ்டர் பாடல்கள் யூடியூப்பில் மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளது. ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு படத்தின் டீஸர் வெளியிடப்பட்ட நிலையில், அது  பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றது.

 

இந்நிலையில் படத்தின் குழுவினர் நேற்று தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் அசர வைக்கும் ஆக்சன் தெறிக்கும் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். அனந்தபூரில் நடந்த வெளியீட்டு விழாவில் “தி வாரியர்” படத்தின் மாஸ் ட்ரெய்லரை, மாஸ் டைரக்டர் போயபதி ஸ்ரீனு வெளியிட படக்குழுவினர் கொண்டாடினர். தமிழ் டிரெய்லரை நடிகர்  சிவகார்த்திகேயன்  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

 

 

இந்த டிரெய்லரில், ராம் பொத்தினேனி மற்றும் ஆதி பினுஷெட்டி ஆகியோர் தங்களது முழு பங்களிப்பையும் வழங்கி, திறமையான  நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதை காணலாம். ராம் பொத்தினேனியின் பிரம்மாண்டமான தோற்றம் மற்றும் ஆதியின் முரட்டுத்தனமான மற்றும் இரக்கமற்ற தோற்றம் ஆகியவை YouTube இல் ஒரு தீப்புயலைத் தூண்டியிருக்கிறது. மீதமுள்ள விவரங்களை அறிய நீங்கள் தி வாரியர் டிரெய்லரை பார்த்து அனுபவிக்க வேண்டும்.

 

என்.லிங்குசாமி இயக்கிய இப்படம் ஜூலை 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. கோலிவுட் மற்றும் டோலிவுட் இரண்டிலும் தனது திறமையை நிரூபித்த ஆதி பினுசெட்டி இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் வில்லனாகவும், கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும்  நடிக்கிறார்கள். இப்படத்தில் அக்ஷரா கவுடா, நதியா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, அன்பறிவு மாஸ்டர்கள் மற்றும் விஜய் மாஸ்டர் ஆக்‌சன் பணிகளை செய்துள்ளனர்.

Related News

8354

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery