’பாகுபலி’ வெற்றிக்குப் பிறகு இப்படி ஒரு படம் தமிழ் மொழியில் வெளியாகாதா? என்று ஏங்கிக்கொண்டிருந்த தமிழ் ரசிக்ரகளின் ஏக்கத்தை போக்கும் விதத்தில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மிக பிரம்மாண்டமான திரைப்படமாக லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பலர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக எடுக்க முயற்சித்து அதில் தோல்வியடைந்த நிலையில், இயக்குநர் மணிரத்னம் அந்த முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவர் இதை வெற்றிகரமாக செய்வாரா? என்ற கேள்வி பலரிடம் ஏற்பட்ட நிலையில், மற்றவர்களால் செய்ய முடியாததை செய்து முடிக்கும் மற்றும் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் அவருடன் கைகோர்த்தவுடன் நிச்சயம் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் திரைப்படமாக உருவாகும் என்ற நம்பிக்கை பிறந்தது.
அதன்படி, பல சிக்கள்கள் வந்தாலும் அனைத்தையும் எதிர்த்து நின்று வெற்றிகரமாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தை சுபாஷ்கரன் தயாரித்து முடித்திருக்கிறார். மணிரத்னத்தின் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதோடு, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
தமிழர்களின் பெருமையை உலகிற்கு சொல்லும் மேலும் ஒரு ஆதாரமாகவும், சோழ மன்னர்களின் ஆட்சி மற்றும் தமிழகத்தை தாண்டிய அவர்களின் வெற்றியை உலகிற்கு சொல்லும் ஒரு திரைப்படமாக உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்று டீசரை பார்த்த ரசிகர்களும், பல பிரபலங்களுக்கும் பேசி வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...