Latest News :

மீண்டும் இணையும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் - உதயநிதி ஸ்டாலின் கூட்டணி!
Monday July-11 2022

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயந்தி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேவீவ் புரொஜக்ட்ஸ் சார்பில் போனி கபூர் வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இணைந்து தயாரித்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது.

 

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் சென்னையில் விழா ஒன்றை ‘நெஞ்சுக்கு நீதி’ படக்குழுவினர் நடத்தினார்கள். 

 

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் போனி கபூர் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, நடிகர் உதயநிதி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைத் தயாரிப்பாளர்கள் எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜூன் துரை ஆகியோருக்கு தங்க சங்கிலி அணிவித்தார். இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு மோதிரம் அளித்தார். மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பரிசுகள் அளித்தார். 

 

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் போனிகபூர் பேசுகையில், “இந்த படத்தின் வெற்றியை உங்களுடன் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நெஞ்சுக்கு நீதி படக்குழுவுடன் பணிபுரிந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் நிறுவனத்தில் வலுவான கதைகள் நிறைந்த படத்தை கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழில் நிறைய படங்கள் செய்ய ஆர்வமாக இருக்கிறேன். எங்கள் நிறுவனம் சார்பில் இப்பொழுது பல படங்கள் செய்துவருகிறோம். தொடர்ந்து இன்னும் பல நல்ல படங்களை கொடுக்க உள்ளோம். உதயநிதியுடன் இணைந்து அடுத்து ஒரு படம் உருவாக்க உள்ளோம். தமிழில் முக்கியமான நடிகர்களுடன் இணைந்து இயங்கி கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது.” என்றார். 

 

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நானும், அருண்ராஜாவும் அடுத்து ஒரு படம் இணைந்து பணியாற்ற உள்ளோம். அருண் உடன் பணியாற்றுவது பெரிய அனுபவமாக இருக்கிறது. இந்த படத்தில் நடிப்பது முதலில் கஷ்டமாக இருந்தது. பின்னர் அருண் இந்த படத்திற்கு கடின உழைப்பை கொடுத்தார். அது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்திற்காக பெரிய அர்பணிப்பை கொடுத்துள்ளனர். தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ராகுல் தான்  இந்த படம் இந்த அளவு வெற்றி பெற காரணம். நல்ல படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.  எப்பொழுதும் நல்ல படத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.” என்றார்.

 

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசுகையில், “இந்த படம் சில மனிதர்களுக்கான, அறிவுரையை கூறும் படமாக அமைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எனது இரண்டாவது திரைப்படம், அதன் 50 வது நாளில் இருப்பது மகிழ்ச்சி. இந்த படத்தின் தலைப்பு எங்களுக்கு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்கிறேன். என்னுடன் இதுவரை உடன் பயணித்து வரும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்லி கொள்கிறேன். படத்தை உருவாக்க பெரும் துணையாக இருந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், படத்தின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த நடிகர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சமூக நீதிக்கான படத்தை நாங்கள் இணைந்து உருவாக்கியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் அனைவருக்கும் நன்றி” என்றார்.

 

நடிகர் ஆரி பேசுகையில், “எனது திரைப்பயணத்தில் முதல் அங்கீகாரம் உதயநிதி அவர்களால் தான் கிடைத்தது. நெடுஞ்சாலை படத்தின் வெற்றி ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தால் சாத்தியமானது. இப்போது அவருடன் ஒரு நேர்மையான படத்திற்கான வெற்றிவிழாவில் இருப்பது மகிழ்ச்சி. முதல் முறையாக நான் நடித்த படத்திற்கான 50 ஆவது நாளில் இருக்கிறேன். இந்த படத்தில் பங்காற்றிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த படத்தை பெரிய வெகுமதியாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் உதயநிதி அவர்களுக்கு நன்றி.” என்றார்.

 

நடிகை ஷிவானி ராஜசேகர் பேசுகையில், “இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் உதயநிதி சார் ஆகியோருக்கு நன்றி. படம் வெளியாகி 50 நாட்கள் ஓடி, ஓடிடியிலும் வரவேற்பை பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.

 

நடிகை தான்யா ரவிசந்திரன் பேசுகையில், “இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த போனி கபூர், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், நடிகர் உதயநிதி சார் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தின் வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது. எல்லோருக்கும் நன்றி.” என்றார்.


Related News

8368

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படமாக ‘பாட்டல் ராதா’ இருக்கும் - இயக்குநர் அமீர் நம்பிக்கை
Sunday January-19 2025

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...

’குடும்பஸ்தன்’ பார்வையாளர்களுக்கும் பல வழியில் கனெக்ட் ஆகும் - நடிகர் மணிகண்டன்
Sunday January-19 2025

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...

’கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? - நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம்
Sunday January-19 2025

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...

Recent Gallery