அப்பா நடிகர் கார்த்திக்கையும், மகன் கெளதம் கார்த்திக்கையும் சேர்த்து வைத்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செழியன். அதற்காக அவர்கள் இதுவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்களோ!, என்று யோசிக்க வேண்டாம்.
’சமர்’ ‘தீராத விளையாட்டு பிள்ளை’ ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய திரு, தான் இயக்க உள்ள நான்காவது படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கும், அவரது மகனும் வளர்ந்து வரும் நடிகருமான கெளதம் கார்த்திக்கும் முதன் முறையாக இணைந்து நடிக்க உள்ளனர்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்டிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செழியன் தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ள இப்படத்தின் ஹீரோயின் மற்றும் பிற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...