தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் திரைத்துறையில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கி வருகிறது. அந்த வகையில், திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கப்பட்டு வந்த திரைப்படங்கள் பிறகு இணையதளங்கள் மூலம் பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஒடிடி தளங்களில் பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஒடிடி தளங்களையும் தாண்டி அதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக உள்ளங்கையில் உலகையே அடக்கி வைக்கும் சக்தி கொண்ட மொபைல் போன்கள் மூலம் புதிய திரைப்படங்களை பார்க்க கூடிய வசதி இன்று தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளது.
மூவி டூ மொபைல் (Movie To Mobile) என்ற தனியார் நிறுவனம் இதே பெயரில் புதிய ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆப்பை டவுன்லோட் செய்து செல்போன்களின் பொருத்திக்கொண்டால் போதும், புதிய திரைப்படங்கள் அனைத்தையும் மிக மிக குறைந்த கட்டணத்தில் பார்த்து விடலாம்.
இந்த புதிய ஆப்பின் அறிமுக நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி இராம நாராயணன், செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சௌந்தரபாண்டியன், என்.விஜயமுரளி, விநியோகஸ்தர் சங்க தலைவர் கே.ராஜன், கில்ட் தலைவர் ஜாகுவார் தங்கம், நடிகர் இமான் அண்ணாச்சி, இதன் தமிழ்நாடு பாண்டிச்சேரி விநியோகஸ்தர் கோவிந்தராஜ், சின்னத்திரை இயக்குனர் சங்க தலைவர் தளபதி, இயக்குனரும் நடிகருமான சி.ரங்கநாதன், தயாரிப்பாளர் தங்கம் சேகர், MTM-இயக்குநர்கள் விஜயசேகரன், தயானந்தன், உட்பட ஏராளமான தயாரிப்பாளர்களும் திரையுலகை சார்ந்தவர்களும் கலந்து கொண்டு மூவி டூ மொபைல் (Movie To Mobile) ஆப்பையும், அதில் திரைப்படம் பார்க்கும் வசதியையும் தொடங்கி வைத்தார்கள்.
மேலும் பல புதிய திரைப்படங்களை வெளியிட இருக்கும் மூவி டூ மொபைல் (Movie To Mobile) மூலம் மாதம் இரண்டு புதிய திரைப்படங்களை பார்க்கலாம் என்று நிகழ்ச்சியில் பேசியவர்கள் தெரிவித்தார்கள்.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’...
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது...
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’...